Friday, June 21, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்று மக்களின் வாக்களிக்கும் உரிமையை மன்னார் ஆயர் வேறு வடிவத்தில் இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார் என்றால் அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்
என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் வடக்குத் தேர்தலை நடத்தினால் அதில் மக்கள் பங்கெடுக்கக்கூடாது என்று மன்னார் ஆயர் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன வென்றும் செய்தியாளர் மாநாட்டில் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மக்களின் வாக்களிக்கும் உரிமையை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று பறித்தார். அதே செயற்பாட்டை சமய தலைவர் ஒருவர் வேறு வடிவத்தில் செய்ய முனைகின்றார் என்றால் அது தொடர்பில் கவலையடையவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்..

தேர்தலை அரசு நடத்தினால் அதை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மன்னார் ஆயர் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் பயங்கரவாதம் தலைவிரி;த்தாடிய பொழுது புலிகளின் தலைவர் பிரபாகரன் வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டு வீட்டிற்குள் பூட்டி வைத்தார் என்று தெரிவித்த அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மன்னார் ஆயர் இப்படி தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு அரசு கடும் கண்டன் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment