Monday, June 24, 2013
இலங்கை::தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என்ற பெயரில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினரின்து பிரதிநிதிகளாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று வருகின்ற: தினேஷ் குணவர்தன
இலங்கை::தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என்ற பெயரில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினரின்து பிரதிநிதிகளாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று வருகின்ற: தினேஷ் குணவர்தன
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடன் எத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் இலங்கை - இந்திய நட்புறவில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. இருதரப்பு உறவை தொடர்ந்தும் பேணுவதில் அரசு உறுதியாகவுள்ளதென ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் நீண்டகாலமாக நிலை கொண்டிருந்த பயங்கரவாதச் செயற்பாடு களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றிகரமாக முறியடித்து, நாட்டு மக்களுக்கு நிலையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்திருப்பதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் நன்கு புரிந்து வைத்திருப்பதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது இலங்கை - இந்திய நாடுகளுக்கிடை யிலான நட்புறவுக்கு குந்தகமாக அமையாதென்பதில் இலங்கை அரசாங்கம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன்படி இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையே காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நட்புறவு ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சூழல் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார செயலாளர் ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பதாக எமக்கு அறியக்கிடை த்துள்ளது. இப்பிரதி நிதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா சென்றிருப்பது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் பல தடவைகள் இந்தியாவுக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என்ற பெயரில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினரின் பிரதிநிதிகளாகவே இவர்கள் இந்தியா சென்று வருகின்றனர். மோதல்களின் போது எல்.ரீ.ரீ.ஈ. அமைப் பின் தலைவர்களும் தலைவிகளும் உயிரி ழந்தமைதான் இவர்களுக்கு இன்னமும் பிரச்சினையாக உள்ளதே தவிர, வடக்கை மக்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை நிலையாக தக்கவைத்துக்கொள்வதுபற்றி இவர்கள் சிறிதும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லையெனவும் அமைச்சர் தினேஷ் தெரிவித்தார்.
இலங்கையில் 30 வருட காலமாக நீடித்திருந்த பயங்கரவாதச் செயற்பாடுகளால் மக்கள் தங்கள் உரிமை களை இழந்து, தினந்தோறும் அழிவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் அச்சத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இன்று அந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அயராத முயற்சியினால் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு வடக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அச்சமின்றி வாழ்க்கை நடத்தக் கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளது. இதனை இந்திய அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வடக்கே மக்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் சுதந்திரமாக வாழ் கின்றனர். இதனை மீண்டும் போராட்ட மாக்குவதற்கே இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் விரும்புகின்றனர் போல் தெரிகிறது.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் மூலம் நாட்டில் தக்கவைத்துள்ள ஜனநாயக த்தை சீர்குலைக்கும் வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற் பாடுகள் காணப்படுகின்றன. எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வினை எட்ட முடியும்.
ஆனால் கூட்டமைப்பு எம்.பி.க்களே சம்பந்தப்பட்டவர்களுடன் உள்நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதனை விடுத்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கின்றனர்.
இது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். சர்வதேச ரீதியான சதிகாரர்கள் மீண்டும் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவிக்கத் தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பினர் இவ்வாறான செயல்பாடு களில் ஈடுபடுகின்றனர். தமிழ் மக்கள் மீது அவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களாயின், அவர்களுக்கான ஜனநாயகம் மீண்டும் பறிபோகும் வகையில் அவர்கள் செயற்படுவதனை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

No comments:
Post a Comment