Monday, June 24, 2013
சென்னை::இலங்கை மற்றுமொரு பாகிஸ்தானாக மாற்றமடைவதனை விரும்பவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதனையே விரும்புவதாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையதிகாரிகள் பயிற்சி பெற்றுக் கொள்வதற்கு அனுமதிப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைப் படையதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதனை இந்தியா நிறுத்திக் கொண்டால்;, அந்த அதிகாரிகள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் எதிரிப் பட்டியல் நீளுமே தவிர நன்மைகள் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானினால் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாவும், மற்றுமொரு பாகிஸ்தானாக இலங்கை மாறுவதனை விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசாங்கம் மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment