Saturday, June 22, 2013

தமிழ் அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கு!!

Saturday, June 22, 2013
இலங்கை::25 வருடங்களுக்குப் பின் சென்று பார்வையிட்ட யாழ்ப்பாண நகரிலிருந்து கடந்த வாரம் டுவிட்டர் செய்தியொன்றை அனுப்பினேன். அந்த செய்தியில் யாழ்ப்பாணத்தில் உள்ளதைவிட தெற்கு டில்லியில் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் மணல் மூடைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன்.
 
முற்றிலும் எனது அவதானிப்பை அடிப்படையாகக் கொண்ட அந்த செய்தி எதிர்ப்பைத் தூண்டியது. பல்வேறுபட்டவர்களினதும் கருத்துக்கள் என்னை தமிழர்களுக் கெதிரானவர் போன்ற தோற்றத்தைக்காட்டியதுடன் இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலியாக என்னை விமர்சித்தும் இருந்தனர்.
ஆயினும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் 1980 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் இருந்ததை விட முற்றிலும் வேறுபட்டவிதத்தில் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. நடுத்தர அளவிலான அந்நகரம் சிறந்த பாதைகளையும் புதிய கட்டிடங்களையும் கொண்டிருந்ததுடன் சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. முன்னெப் போதும் இல்லாதவாறு நல்லூர் கோயில் கம்பீரமாக காட்சியளித்தது.
 
புலிகளினால் கொலை செய்யப்பட்ட துரையப்பாவின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு சிறந்த வகையில் காட்சியளித்ததுடன் நன்கு பராமரித்து பேணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது. கசப்பான கொடிய யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியான போதிலும், மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்ட நகரங்களுள் யாழ்ப்பாணம் பாரிய அபிவிருத்திகளுடன் முன்னிலையில் திகழும் நகரமாக மாறுமென்று எவரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
 
சம்பந்தனின் கொள்கை
 
பொதுமக்கள் ஒன்று கூடியிருந்த இடத்தில் பொதுவான ஒரு கருத்து நிலவியது. அதாவது, தமிழர்களின் காணிகளை இலங்கை இராணுவம் விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கையகப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டேயாகும். மேலும் தென் பகுதியிலிருந்து வட பகுதியில் சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்படுகின்ற தெனவும் பலவாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழர்களது தேவைப்பாடுகளை எழுத்து மூலமாக எம்மிடம் கையளித்தனர். 80 வயதையுடைய அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் கம்பீரமான தோற்றத்தையுடைய ரோமானிய செனட்டர் போன்று எழுத்தாற்றலிலும் பேச்சாற்றலிலும் காணப்பட்டார். அவர் பேசும்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ் மக்களை அகற்றுவதே
இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை ஆசை எனவும் குறிப்பிட்டார்.
 
இந்திய வம்சாவளி வர்த்தகர்களின் ஒன்று கூடலொன்றின் போது ஒரு தமிழ் வர்தகரிடம், தலைநகரில் தமிழர்கள் எத்தனை வீதம் உள்ளனர் என நான் கேட்டேன். ஏறத்தாள 30 வீதம் என்று அவர் பதிளலித்தார். நான் சிரித்தவாறே அவரிடம் வியாபாரத்தில் நீங்கள் 60 வீதத்தை கட்டுப்படுத்துவது உண்மையா என கேட்டேன். அதற்கு அவர் 70 வீதம் என பதிலளித்தார். இலங்கையில் எங்கும் மக்கள் மத்தியில் எடுபடாத உன்னத சம்பந்தனின் கோட்பாடே நிலைத்திருந்தது.
 
இராணுவ வெற்றி
 
இந்த 'தமிழ் பிரச்சினை' உலக மனித உரிமைகள் நிறுசவனங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதுடன் இந்தியாவில் சில வட்டாரங்களில் சீற்றம் தூண்டியுள்ள “யாழ்ப்பாண பிரச்சனை”யும் இதுவாகத் தெரிகின்றது. புகழ்பெற்ற இராணுவ வெற்றியின் பின்னரான பிரச்சினைக்கு ஒரு வளுவான தீர்வுகானும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இப் பிரச்சனையின் பிரதான பகுதியாகத் திகழ்ந்திருந்தது.
 
இந்தியாவைப் பொருத்தவரையில் ஒரு இறையாண்மையுடைய அண்டை நாட்டு உள் விவகாரங்களில் தேவையில்லாமல் தொடர்ந்து அக்கறை காட்டிவருகின்றது, 'அதிகார பகிர்வு' எனப்படுவது அடிப்படையில் 1987 இல் ரஜீவ் காந்தி மற்றும் ஜேஆர் ஜயவர்தன கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமான 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதாகும். இத் திருத்தத்தமானது இரண்டு விடயங்கள் தொடர்பாக உறுதியளித்துள்ளது. அதாவது தமிழர்களின் தாய் நிலம் என்றழைக்கப்பட்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்தள் மற்றும் இந்திய மாநில அரசுகளை ஒத்த மாகாண சபைகளின் உருவாக்கம் என்பதாகும்.
 
ஆனால் இது தொடர்பில் இரண்டு பிரச்சினைகள் எழுந்துள்ளன. முதலாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பானது நடைமுறை அடிப்படையில் இலங்கை உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு "நேர்மையற்ற தீர்ப்பு" என்று சம்பந்தன் குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, இது தவிர வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால், சிங்களப் பகுதிகளிலும் மாகாண சபை தொடர்பாக மக்கள் ஆர்வமிக்கவர்களாக இல்லை. ஆயினும், மாகாண சபைகள் தேர்தலானது வட மாகாணம் தவிர அனைத்து மாகாணங்களிலும் நடைபெற்றது.
 
ஒரு கால கட்டத்தில் அரசாங்கம் வட மாகாணத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவது பற்றிய எண்ணத்தை கொண்டிருந்ததுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் ஜனநாயக செயற்பாடுகள்யாவும் செப்டம்பரில் முன்னெடுக்கப்படுவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றி நிச்சயமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பானது, இப்போது மாகாண சபை அதிகாரங்கள் போதுமான அளவில் இல்லை என்று கூறுகின்றது. இது உள்ளூர் அரசின் மூலம் நிலம் மற்றும் பொலீஸை கட்டுப்படுத்த விரும்புகின்றது. இதன் முதல் கருத்தை அரசு ஏற்றாலும் இக் கோரிக்கையானது வடக்கின் சகல பாதுகாப்பு நடவடிக்கைக
ளையும் பாதிக்கும்.

இந்திய அழுத்தம்
 
இலங்கையின் தயக்கம் தொடர்பில் யாருக்கு குற்றம் சொல்ல முடியும்? பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் மட்டுமே பூர்தியடைந்த நிலையில் மத்திய அரசானது அதன் பாதுகாப்பை தளர்துமாரு வழியுருத்துவது மிகவும் நியாயமற்ற செயலாகும். வட மாகாணத்தில் பெருமளவில் இராணுவத்தினர் உள்ளனர் ஆனால் அவர்கள் பாதுகாப்பை ஸ்தீரப் படுத்தும் முகமாகவும் பாதுகாப்பான சேவையை முன்னெடுப்பதுடன் அபிவிருத்திக்கு பங்களிக்கும் முகமாகவுமே அவர்கள் செயற்படுகின்றனர்.
 
இவ்வாரான ஏற்பாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்க முடியாது. ஏனெனில், இவர்களது உறுப்பினர்களும் புலிகளின் அச்சுறுத்தலுக்கும் இலக்குக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். மேலும், ஒருவேளை இந்திய அழுத்தத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும். இது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்துள்ளது. இவர்கள் இன்னும் உணர்ச்சி பிரிவினைவாத்த்தில் நம்பிக்கை கொண்டிருக்கலாம் ஆனால் இதில் முறையாக அரசியல் பிரிவினைவாதத்தையும் முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணியின் 'சுயநிர்ணயத்தையும்' கைவிட்டுள்ளது.
 
அதே நேரம் இவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, நாட்டினுல் எந்நேரமும் பதட்டமான சூழ்நிலையும் இனப்பிரச்சனைகளும் தொடர்ச்சியாக இருப்பதில் விருப்பம் கொண்டவர்களாகவே இவர்கள் விளங்குகின்றனர். தமிழ் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுபவர்கள் தாம் யாழ்ப்பாணத்தில் வாழும் சாதாரண மக்களுக்காவேயன்றி இவர்களுக்கு நிதியளிக்கும் புலம்பெயர் தமிழ்களுக்காகவே செயற்படுகின்றோம் என்பதை உணராதவரை 'இயல்பான' அரசியல்வாதிகளாக முடியாது. இவ்வாரான புலம்பெயர் தமிழ்களே இலங்கைக்கு அதன் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கான தடைக் கல்லாக செயற்படுகின்றனர்.

No comments:

Post a Comment