Friday, June 21, 2013
இலங்கை::வடமாகாண காவற்துறை அதிகாரங்களை ரத்து செய்யவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது: சட்டத்தரணி கோமன் தயாசிறி!
காவற்துறை அதிகாரங்களை ரத்து செய்யவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக, பிரபல சட்டத்தரணி கோமன் தயாசிறி தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது என்ற அடிப்படையில் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்களை ரத்து செய்ய தற்போது செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஆனால் தென்னிலங்கையில் காவற்துறையினரின் அதிகாரங்களை மீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.அவர்களின் செயற்பாடுகள் ஆபத்தானதாக இருக்கிறது.
எனவே காவற்துறையினர் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment