Friday, June 7, 2013

கொஹுவல பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் சிறை சுவரை உடைத்து கைதி தப்பியோட்டம்: பொலிஸார் பணி இடைநிறுத்தம்:

Friday, June 07, 2013
இலங்கை::கொஹுவல பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மூன்று
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஒருவரே தப்பிச் சென்றுள்ளார்.
 
பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூடமொன்றின் சுவரை உடைத்து சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் இடம்பெற்றபோது கடமையில் இருந்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மேலும் இரண்டு கான்ஸ்டபிள்களும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ரன்ன பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment