Friday, June 07, 2013
இலங்கை::வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை::வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 24 மீனவர்களையும் தலைமன்னார் பொலிஸார் நேற்று மன்னார் பதில் நீதவான் இமானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் அஜர்படுத்தினர்.
இதில் தமது தந்தையுடன் கடற்றொழிலுக்குச் சென்ற 13 வயது சிறுவனும் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய மன்னார் பதில் நீதவான் சிறுவனின் தந்தையை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கடல் எல்லைக்குள் மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் காரை நகர் கடற்பரப்பில் கைதான 25 தமிழக மீனவர்களும் இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment