Tuesday, June 18, 2013
இலங்கை::இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவோ அல்லது வேறும் நாடொன்றோ பிரயோகிக்கும் அழுத்தத்திற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றில் புலிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை பூர்த்தி செய்யவே இந்தியா முனைப்பு காட்டி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கிலே தமிழர்களும், கிழக்கிலோ முஸ்லிம்களும் மாகாணசபை ஆட்சியை கைப்பற்றினால் அது இரு மாகாணசபைகளையும் இணைக்க வழியமைக்கும் என அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment