Tuesday, June 18, 2013

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய சமர்ப்பித்துள்ள தனி நபர் பிரேரணை முதலாம் வாசிப்பு இன்று!

Tuesday, June 18, 2013
இலங்கை::அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்னதேரர் சமர்ப்பித்துள்ள தனி நபர் பிரேரணை முதலாம் வாசிப்பிற்காக இன்று பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தேவல தெரிவித்தார்.
 
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட மேலும் மூன்று அதிகாரங்களை திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற இம் மாதத்திற்கான முதலாவது அமர்வின் போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
 
இதன் பிரகாரமாக இன்று முதலாவது வாசிப்பிற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தனி நபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment