Tuesday, June 18, 2013

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்:ராஜித்த சேனாரட்ன!

Tuesday, June 18, 2013
இலங்கை::13 ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் இரண்டு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37 ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியும் என்ற சட்டம் தற்போது இறந்துபோய்விட்டது. எனவே அதனை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதை ஆதரிக்க முடியாது. மாறாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற 37 ஆவது பிரிவை நீக்கிவிடலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் மற்றும் அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ராஜித்த சேனாரட்ன.

No comments:

Post a Comment