Monday, June 24, 2013
இலங்கை::இலங்கை இராணுவப்படையினர் தமிழகத்தின் வெலிங்டன் முகாமிலிருந்து அகற்றப்பட்டமைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
குறித்த அதிகாரிகள் வெலிங்டன் முகாமில் ஓராண்டு கால பயிற்சியை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டால் அவர்களை மீள நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விங் கமாண்டனர் எம்.எஸ் பண்டார மற்றும் மேஜர் சீ.எஸ்.ஹரிஸ்சந்திர ஆகியோர் தற்போது இந்தியாவில் உயர் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். 1982 – 1983ம் ஆண்டு காலப்பகுதியில் தாமும் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவு அமைப்புக்கள் இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்பு படையதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நிறுத்தப்பட்டாமை பாரிய பிரச்சினையாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment