Monday, June 24, 2013

அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதான யோசனையொன்றுக்கு அமைச்சரவை அனுமதி!

Monday, June 24, 2013
இலங்கை::அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதான யோசனையொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் எனவும் ஜனாதிபதியின் அந்த யோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment