Monday, June 24, 2013

நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தடையாக உள்ளனர்: ரவிநாத் ஆரியசிங்க!

Monday, June 24, 2013
இலங்கை::புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை  புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு பெரும் தடையாக புலி ஆதரவாளர்கள் இருப்பதாக ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் புலம் பெயர் மக்களும் அபிவிருத்தியும் என்ற தொனிப்பொருளில் ஆற்றிய உரையின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த மூன்று மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகளை சீர் குலைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment