Thursday, June 27, 2013
இலங்கை::44 தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்களும் 110 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களும் தமது பயிற்சிகளை பொலிஸ் பயிற்சி பாடசாலையில் பூர்த்தி செய்து கொண்டு கடந்த ஜூன் 17 ஆம் திகதி வெளியேறினர். இவ் வைபவத்தில் சபாநாயகர் கௌரவ சாமல் ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதயாகக்கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை பயிற்சிகளை பூர்த்தி செய்த மேலும் 215 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் வெளியேறினர். பெண் உப பொலிஸ் பரிசோதகர் தொகுதியில் தமிழ் பேசக்கூடிய அதிகாரிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
44 உப பொலிஸ் பரிசோதகர்களும் தமிழ் மொழியை பேசக்கூடிய பிரதேசங்களில் சேவையாற்றவுள்ளதுடன் அனைத்து அதிகாரிகளுக்கும் கான்ஸ்டபிள்களுக்கும் மொழிப்பயிற்சி உட்பட விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசினால் யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
பில்லியன் ரூபா பெறுமதியான வீதி, பாடசாலை, வைத்தியசாலை, வர்த்தக கட்ட்டத்தொகுதி சிவில் நிர்வாக வசதிகள் போன்ற பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்க்கோன் மற்றும் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.










No comments:
Post a Comment