Thursday, June 27, 2013
இலங்கை::நாட்டில் தற்போது வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் சரியான தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாற்று எதுவும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் நேற்று அமைச்சில் வைத்து விளக்கமளித்திருந்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்பு தொடர்பிலான திருத்தங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக இது தொடர்பில் கட்டமைக்கப்பட்ட விரிவான அணுகுமுறை அவசியமென மாகாண சபைகள், அரசியல் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் தொழில்வல்லுனர்கள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை அண்மையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாராளுமன்றத்தின் பார் வையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் அத்தியாவசிய மாகியுள்ள நிலையில், பெரும்பான்மையினர் விசேடமாக கேட்டுக் கொண்டுள்ளதற் கமைய பாராளுமன்ற தெரிவுக் குழு அத்தியாவசியமாகியி ருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
அரசாங்கம் இவ்விடயம் தொடர்பிலான செயற்பாடுகளை துரிதப்படுத்தி வருவதாக தூதுவர்கள் மத்தியில் சுட்டிக் காட்டிய அமைச்சர், இதன் காரணமாகவே பாராளுமன்ற தெரிவுக் குழு, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் சபாநாயகர் கடந்த வாரம் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதன்படி, ஜுலை 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்றத் தெரிவுக் குழு கூடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தெரிவுக் குழுவின் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குழுச் செயற்பாடுகள் தொடர்பில் முக்கியத்துவங் கள் மற்றும் முன்னு தாரணங்களை அடிப் படையாகக் கொண்டு ஆரம்ப உடன்படிக்கை களை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ் பரந்துபட்ட கலந்துரை யாடலுக்குப் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் கூறினார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் கலந்துரையாடல்கள், அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் உள்ளிட்ட அரசியலமைப்பின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக அமையுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அரசாங்கம் சார்பில் 19 உறுப்பினர்களும் எதிர்கட்சிகள் சார்பில் 12 உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவர். பாராளுமன்ற ஜனநாயக முறைமைக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்ற வகையிலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தெரிவுக் குழுவின் விதிமுறைகளுக்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துகளும் இதில் உள்வாங்கப்படும் அதேவேளை தெரிவுக் குழுவின் செயற் பாடுகள் தீர்மானிக்கப்படும்.
காலவரை யறைக்குட்பட்டதாக இருக்குமெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் என்பதே அரசாங் கத்தின் எதிர்பார்ப்பும் மற்றும் நம்பிக்கையுமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவளை, நவம்பரில் இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடு மற்றும் அதனையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள வர்த்தகப் பேரவை, இளைஞர் பேரவை மற்றும் மக்கள் பேரவை ஆகியவற்றை முன்னிட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட ஏற்பாடுகள் என்பன தொடர்பாகவும் அமைச்சர் பீரிஸ் இதன்போது வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
மூன்று அமைச்சரவை குழுக்கள் இது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பிரபல தொழில் வல்லுனர்களது தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள வர்த்தகப் பேரவைக்கென தனியார் மற்றும் அரச துறையினரால் 69 கொள்கைச் செயற்திட்டங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் விதம் அதன் தற்போதைய வளர்ச்சி நிலை என்பன குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளித்தார்.

No comments:
Post a Comment