Saturday, June 8, 2013

மீனவர்களை காப்பாற்ற ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ள விமானப்படை: நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு: 6 மீனவர்கள் இதுவரை உயிருடன் மீட்பு!

Saturday, June 08, 2013
இலங்கை::சீரற்ற வானிலையினால் அனர்த்தத்திற்கு இலக்கான மீனவர்களை காப்பாற்றுவதற்காக விசேட விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளதாக விமானப்படை தரப்பு குறிப்பிட்டுள்ளது.
 
பலப்பிட்டி, களுத்துறை, பேருவளை மற்றும் தெஹிவளை அகிய பிரதேசங்களில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய தெஹிவளை கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள மீனவர்களை காப்பாற்றுவதற்காக பெல் - 412 ரக ஹெலிகொப்டர் ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
பலப்பிட்டி மற்றும் களுத்துறை கடற் பிரதேசங்களை கண்காணிப்பதற்காக வை - 12 ரக விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது...
 
மன்னார் – கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் அதிக காற்று வீசுவதுடன், கொந்தளிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில் கடுமையான காற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
 
ஹிக்கடுவை தொடரூந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், கடலோர தொடரூந்து சேவை முற்றாக பாதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அத்துடன், வரகாபொலை பகுதியில் மரணம் ஒன்று முறிந்து விழுந்ததில், கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது...
 
தெஹிவளை கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்கள் 12 பேரையும் காப்பாற்றுவதற்கு கடற்படையினரும் விமானப்படையினரும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடலில் சுமார் 100 கடல்மைல் தூரத்தில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்ற அந்த படகில் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும் ஹெலிகொப்டர் மூலமாக எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்களை மீட்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரும், இராணுவத்தினரும் உறுதியளித்ததையடுத்து தெஹிவளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தினால் சில மணிநேரம் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில் திணைக்கள கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது..
 
சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு!
 
சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி, பேருவளை, பெந்தோட்டை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.இதேவேளை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் மூலம் மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
பேருவளை கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரும் தெஹிவளை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
 
ஆறு மீனவர்களுடன் தெஹிவளை கடற்பரப்பில் படகொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கையை விமானப்படை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஜய சாகர என்ற கப்பலை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
 
பேருவளை, மொரட்டுவை, தெஹிவளை ஆகிய கடற்பரப்புக்களில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் படகுகளில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக நந்திமித்திர மற்றும் சயுர கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்...
 
காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலைகாரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

அந்த படகுகளில் சென்ற மீனவர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் அந்த இரண்டுசடலங்களும்  ஹிந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய கரைகளில் ஒதுங்கியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை  இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர். இதனையடுத்தே அவர்களை தேடும்பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்...
 
 
கடும் காற்றில் சிக்கி காணாமல் போன 6 மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பலபிட்டி, மவுன்லெவனியா மற்றும் கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் விமானப்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.   

No comments:

Post a Comment