Saturday, June 8, 2013

கிழக்கு மாகாண இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பு கிடையாது: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Saturday, June 08, 2013
இலங்கை::கிழக்கு மாகாண இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இந்த சம்பவங்களுக்கு இராணுவத்தினரே பொறுப்பு எனவும் புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
குருக்கல் மடம் செல்லக்கதிர்காமம், குருக்கல்மடம் அய்னார் கோயில், மாங்காடு பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், இவை அடிப்படையற்றவை எனவும் இராணுவப் பேச்சாளர் குறி;ப்பிட்டுள்ளார்.
 
பிள்ளையார் கோயில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணைகளின் மூலம் உண்மை வெளியிடப்படும் புலி ஆதரவ இணைய ஊடகங்களின் போலிக் குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment