Thursday, June 6, 2013

கொழும்பு துறைமுக களஞ்சியமொன்றில் அண்மையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தினால் சுமார் 40 மில்லின் ரூபா இழப்பு!

Thursday, June 06, 2013
இலங்கை::கொழும்பு துறைமுக களஞ்சியமொன்றில் அண்மையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தினால் சுமார் 40 மில்லின் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் சந்திக லியனகேவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷமிகள் சிலரால் அல்லது தனிநபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என அதுகுறித்த விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸார் கருதுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பில் சேதமடைந்த களஞ்சியத்தின் பொறுப்பதிகாரி நிதி முகாமையாளர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்பட்ட களஞ்சியத்தின் பொறுப்பதிகாரி நிதி முகாமையாளர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்பட்ட களஞ்சியத்தில் 32 தன்னியக்க கெமராக்கள் காணப்பட்டபோதிலும் அவற்றில் நான்கு கெமராக்களில் மாத்திரமே சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆயினும் அந்த நான்கு கெமராக்களின் பற்றரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சம்பவத்தின் காட்சிகள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

துறைமுக களஞ்சியத்தில் நள்ளிரவு 12.36 அளவில் தீ அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதிகாலை 01.02 அளவிலேயே தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்கக்கூடும் என துறைமுக மின் பொறியியலாளர் விஜித நந்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment