இலங்கை::ஜோர்தானில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கை பணியாளர்கள் ஆறு பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ்
பிரஜையொருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ஜோர்தானிலுள்ள இலங்கைப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனியவிடம் வினவப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரக தொழிலாளர் பிரிவின் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் சமரச முயற்சிகளை சமாதான முறையில் அவர்கள் முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment