Thursday, June 27, 2013
இலங்கை::கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் எதிர்வரும் ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பாடசாலை சிறார்களுக்கன கல்விக் கண்காட்சி ஒன்றை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
இக் கண்காட்சியானது கிளிநொச்சி பிரதேச பாடசாலை சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டக் கூடியதாகவிருக்கும் அதேவேளை வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்ரசிரி அவர்களின் தலைமையின் கீழும் கிளிநொச்சி படைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழும் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வியை மீளுருப் பெறச் செய்வதில் பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.அத்துடன் பாதுகாப்பு படையினர் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் சிறார்களின் கல்வித்தரத்தை மேம்படுத்து வதற்காக தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிளி நொச்சி மாவட்டத்திலுள்ள சுமார் 121 பாடசாலைகள், தென்பகுதியிலுள்ள முன்னனி பாட சாலைகளான ரோயல் கல்லூரி, ரிச்மன் கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, தர்மராஜ கல்லூரி, கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவை கல்லூரி,யாழ்ப்பாணம், மொரட்டுவ, ரஜரட்ட, மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்கள் போன்றவை இக்கண்காட்சியில் சமூகமளிக்கவுள்ளன.இது வட பகுதி, தென்பகுதி மாணவர்களிடையே அறிவையும் நற்பையும் பரிமாறிக்கொள்ளும் தளமாக அமையவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

No comments:
Post a Comment