Thursday, June 6, 2013

கடலில் மீன்பிடித்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் கைது!

Thursday, June 06, 2013
ராமேஸ்வரம்::கடலில் மீன்பிடித்த, ராமேஸ்வரம் மீனவர்கள், 25 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளனர்.
 
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை, 755 விசைப்படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். பகல், 12:00 மணிக்கு, ஐந்து ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் சேர்ந்த, ஐந்து விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள், 25 பேரையும், கைது செய்தனர். அவர்களை, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, விசாரித்து வருகின்றனர்.
 
மீனவர்களை தலைமன்னார் போலீசாரிடம், கடற்படையினர், இன்று காலை ஒப்படைக்கலாம், என, தெரிகிறது. இலங்கை அரசின் கைது அறிவிப்பால், ஏற்கனவே, மீனவர்கள் பீதியில் இருந்தனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களில், மீன்பிடிக்க சென்று, அதிக இறாலுடன், திரும்பிய மீனவர்கள், இலங்கை கடற்படை குறித்து, நல்லவிதமாக கூறிவந்தனர்.

No comments:

Post a Comment