Thursday, June 6, 2013

1987 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆகியோருக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை: இன்று 26 வருடங்களின் பின்னர் நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்வாங்கப்பட்டுள்ளது!

Thursday, June 06, 2013
இலங்கை::1987 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆகியோருக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் இன்று 26 வருடங்களின் பின்னர் நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்வாங்கப்பட்டுள்ளது.
 
இந்த 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள மாகாணங்களின் இணைப்பு மற்றும் காணி, காவற்துறை அதிகாரங்கள் என்பன இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசிய கட்சியை தவிர்ந்த பெரும்பான்மையின கட்சிகளுக்கு மத்தியில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
 
இந்தநிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் சர்வதேசத்தால், எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
இதற்கு முன்னதாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள, பெரும்பான்மை கட்சிகள் சர்சையாக கொண்டு வந்துள்ள அதிகாரங்கள் தொடர்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் முன் எடுக்கப்படுகின்றன.
 
இரண்டு மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுப்பது மத்திய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு மாகாண சபைகளின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாது செய்வது மற்றும் காணி, காவற்துறை அதிகாரங்களை மீள்பரிசீலப்பது போன்ற முனைப்புக்களே முன் எடுக்கப்படுகின்றன.
 
இதனடிப்படையில்,   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளது தலைவர்களின் ஒன்றுக்கூடல் கொழும்பில் இடம் பெற்றது...
 
காணி, காவற்துறை அதிகாரங்கள்    (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்) மத்திய தலைமை  அரசின் கீழ் இருப்பது தான்  இலங்கை இறைமைக்கு நல்லது.

No comments:

Post a Comment