Thursday, June 6, 2013

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக ஐ.நா., தூதர் சூசன் ரைஸ் நியமனம்!

Thursday, June 06, 2013
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா.,வில், அமெரிக்க தூதராக இருப்பவர் சூசன் ரைஸ். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தேர்வானதும், வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி கிளின்டன் மறுத்து விட்டார். இதையடுத்து, அந்த பதவிக்கு சூசன் ரைஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

லிபியா நாட்டின் அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். "இந்த பிரச்னையை, ஐ.நா., தூதரான சூசன் ரைஸ் சரியாக கையாளவில்லை' என, அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.,க்கள் குறை கூறினர். இதனால், அவர் வெளியுறவு அமைச்சர் பதவி வகிக்க கண்டனம் எழுந்தது. இதையடுத்து, ஜான் கெர்ரி, வெளியுறவு அமைச்சரானார்.

ஒபாமாவின் நம்பிக்கைக்குரிய சூசன் ரைஸ்,48, தற்போது, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர், டாம் டோனிலான், அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். ஐ.நா., தூதர் பதவியிலிருந்து சூசன் ரைஸ் விலகுவதால், அவருக்கு பதிலாக, சமந்தா பவர், புதிய தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment