Monday, June 10, 2013
இலங்கை::அமெரிக்காவும்-கனடாவும், தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 22ம் பொது அமர்வில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இலங்கையின் பிரதிநிதிகள் பதில் வழங்கியுள்ளனர்.
இலங்கையில் இன்னும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதுடன், இது தொடர்பில் விசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்காவின் ஐக்கிய நாடுகிளின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று, கனடாவின் பிரதிநிதி குற்றம் சுமத்தி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள இலங்கையின் பிரநிதிகள், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகளே ஆகின்றன.
ஆயினும் இந்த காலகட்டத்துக்குள் குறிப்பிடத்தக்க அளவு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment