Monday, June 10, 2013

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐரோப்பிய விஜயம்!

Monday, June 10, 2013
இலங்கை::இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். ஜெர்மனி, ஒஸ்ட்ரியா, ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமைச்சர் பீரிஸ் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. குறித்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்பத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது,
 
குறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தக் காலப்பகுதியில் நடைபெறவுள்ள சில முக்கிய மாநாடுகளிலும் அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

No comments:

Post a Comment