Friday, June 14, 2013
பாட்னா::பீகார் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஒரே நேரத்தில் 200 நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒரு RPF ஜவான் உட்பட, மூன்று பேர் கொல்லப்பட்டனர்! 5 பயணியும், ரயில்வே பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டுஅதற்கு பலன் கிட்டியதாக தெரியவில்லை. சென்ற மாதம் கூட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் அணிவகுப்பு பேரணியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட 27 பேர் பலியானது நினைவிருக்கலாம். இந்த தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லாவும் இரண்டு தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் மற்றொரு தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள் நக்சலைட்டுகள். இந்த முறை சம்பவம் நடந்த மாநிலமோ பீகார்.
இம்மாநிலத்தில் ஜமோய் மாவட்டம் அருகே தன்பாத் - பாட்னா இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் போய்க் கொண்டிருக்கிறது. மதியம் 1.30 மணியளவில் அங்கு வந்த சுமார் 200 நக்சலைட் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் அந்த ரயில் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கொடூர தாக்குதலில் ஆர்.பி.எப். எனப்படும் ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒரு ஜவான் பலியானார். ஒரு பயணி மற்றொரு ரயில் பாதுகாவலர் ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதலுக்குள்ளான இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ரயிலின் முன்புறம் 2 ஆர்.பி.எப். வீரர்களும், பின்பகுதியில் 3 ஆர்.பி.எப். வீரர்களும் பாதுகாப்புக்காக சென்றனர். அந்த நேரத்தில்தான் சுமார் 200 நக்சலைட்டுகள் இந்த ரயிலை வழியில் இடைமறித்து தாக்கினார்களாம்.
சம்பவம் நடந்த பகுதி நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். ஜமோய் மற்றும் லக்கிஷெராய் மாவட்டத்தில் இந்த பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதி என்று போலீஸ் சூப்பிரண்டு தீபக் தெரிவித்தார். மதியம் 1.30 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். உடனே ரிசர்வ் போலீஸ் படையினரும் திருப்பி தாக்கினார்கள். இந்த சண்டை சுமார் 40 நிமிடம் நீடித்தது. அப்போது ஆர்.பி.எப். வீரர்கள் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க பயணிகளை கீழே படுத்துக் கொள்ளுமாறு எச்சரித்தனர். இதன் காரணமாகவே பலர் உயிர் தப்பினர்.
அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும், ஜவான்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றி இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதாவது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வேன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரண நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் அங்கு விரைந்தது. நடுக்காட்டில் தீவிரவாதிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
மாவோயிஸ்டுகள் இரண்டு RPF பணியாளர்கள் இருந்து ஆயுதங்கள் சூறையாடினார் பின்னர்







No comments:
Post a Comment