Friday, June 07, 2013திருவனந்தபுரம்::கொச்சியில் போதிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 14 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் கொச்சி பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் இலங்கையை சேர்ந்த சிலர் ரகசியமாக தங்கி இருப்பதாக போலீஸ் கமிஷனர் ஜேம்சுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி கமிஷனர் டோமின் ஜெபஸ்டின் தலைமையில் போலீசார் அந்த பகுதி லாட்ஜ்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, போதிய ஆவணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பது தெரிய வந்தது. போலீ சார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ராமேஸ்வரம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து வந்தவர்கள் என்பதும், கொச்சியில் பெயின்ட்டிங் வேலைக்காக ஏஜென்ட் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
பின்னர், 14 பேரையும் கைது செய்து ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களை அழைத்து வந்த ஏஜென்ட் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், இரு மாதங்களுக்கு முன்பு கொச்சியில் இலங்கையை சேர்ந்த 16 பேர் பிடிபட்டனர். அவர் களை ஒரு ஏஜென்ட் ழீ13 லட்சம் வாங்கிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக அழைத்து வந்திருந்தார். போலீசார் அவர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment