Thursday, June 6, 2013

13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை: குணதாச அமரசேகர!

Thursday, June 06, 2013
இலங்கை::13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
 
சௌசிறிபாயவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
13 ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது அரசாங்கம் வடக்குத் தேர்தலை நடத்துமானால் அது பிரிவினைவாதிகளின் ஈழக் கனவை நனவாக்கும்.
 
அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் தேவையில்லாத திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.
 
எனவே ஜனாதிபதி உடனடியாக 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment