Friday, June 07, 2013
சிம்லா::இமாசலப்பிரதேசத்திற்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் அந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்தலங்கள் நிறைந்த இமாசலப்பிரதேச மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் சுற்றுலா வருவது வழக்கம். கடந்த ஞாயிறு அன்று 30 வயதுள்ள ஒரு அமெரிக்க பெண் இமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மனாலி என்ற சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளார்.மனாலிக்கு வந்துள்ளார்.
இந்த பகுதி மலைப்பாங்கான இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லாட்சில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று லாட்ஜில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பி உள்ளார். திரும்பும்போது வாடகை டாக்சி அந்த பெண்ணுக்கு கிடைக்கவில்லை. நீண்டநேரமாகிவிட்டதால் அந்த வழியாக ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியில் ரூம் செல்ல லிப்ட் கேட்டுள்ளார். லாரியில் வந்தவர்களும் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் சென்றவுடன் லாரியை வேறுபக்கம் திருப்பி ஒரு மறைவான இடத்தில் நிறுத்தி உள்ளனர்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு அனாதையாக விட்டு சென்றுவிட்டனர். அந்த பெண் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழித்துவர்களை தேடி வந்தனர். தேடுதல் வேட்டையில் கற்பழித்த 3 பேரும் சிக்கி உள்ளனர் என்று குல்லு மாவட்ட போலீஸ் அதிகாரி வினோத் தவாண்
நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment