Sunday, June 02, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் எதிர்க்கட்சிகளுடன் ஜாதிக ஹெல உறுமய கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் எதிர்க்கட்சிகளுடன் ஜாதிக ஹெல உறுமய கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜாதிக ஹெல உறுமய கட்சி தனிப்பட்ட நபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரசியல் கட்சிகளுக்கு இந்த பிரேரணை தொடர்பில் தெளிவுபடுத்த உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
முதலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment