Sunday, June 2, 2013

புலி உறுப்பினரை தப்பிச் செல்ல உதவிய இரண்டு சிறைச்சாலை அதிகாரி குறித்து சிறைச்சாலை மற்றும் காவற்துறை ஆகியவற்றை சேர்ந்த இரண்டு குழுக்கள் விசாரணை!

Sunday, June 02, 2013
இலங்கை::மாத்தறை வெசாக் வலயத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும்  புலி உறுப்பினரை தப்பிச் செல்ல உதவிய இரண்டு சிறைச்சாலை அதிகாரிக் குறித்து சிறைச்சாலை மற்றும் காவற்துறை ஆகியவற்றை சேர்ந்த இரண்டு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
 
இந்த இரண்டு அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, குறித்த சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  மேற்படி அதிகாரிகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
தப்பிச் சென்ற புலிகளின் உறுப்பினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் நீண்டகாலம் மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் குறித்த புலிகளின் உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment