Sunday, June 2, 2013

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!.

Sunday, June 02, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
அதன் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அரசாங்க உறுப்பினர்களுடன் முழுமையான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி, ஜனாதிபதி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளது.

 

No comments:

Post a Comment