Sunday, June 02, 2013
இலங்கை::சிங்களவர்கல் 10 குழந்தைகளை பெற்றால் மட்டுமே சனத்தொகையை பேணமுடியும்.
இன்று உள்ள சிங்கள சனத்தொகையை பேண வேண்டுமாக இருந்தால் ஒருவர் 10 குழந்தைகளை பெறவேண்டும். அப்போதே எமது சிங்கள சனத்தொகையின் அளவை பேணமுடியும். ஏனெனில் இன்னும் 40 வருடங்களில் 80 இலட்சம் பேர் இறக்கப்போகின்றனர். ஒருவர் 10 குழந்தைகளை பெற்றால் மட்டுமே சனத்தொகை அளவினை சீராக பேண முடியும் என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் தலைவருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பயங்கரமான சூழலொன்றினை சிங்கள சமூகம் எதிர்கொண்டுள்ளது. இன்னும் 30/40 வருடங்களில் அது தெளிவாக விளங்கும். இதனை நான் கூறினால் இனவாதம் பேசுவதாக கூறுவர்.
கணக்குப் போட்டு பாருங்கள். இந்நாட்டின் சனத்தொகை கணிப்பை எடுத்து நோக்கினால் ஒரு கோடியே 30 இலட்சம் சிங்களவர்கள் இந்நாட்டில் உள்ளனர். அதில் 80 இலட்சம் பேர் 40 வயதை தாண்டியவர்களாவர். பெண்களை எடுத்துக்கொண்டால் பிள்ளைகளை பெற்றெடுப்போர் இன்னும் 40 ஆண்டுகளில் 80 இலட்சத்தால் குறைவடையப்போகிறது. எஞ்சுவது 50 இல
ட்சம் பேர் மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment