Thursday, May 16, 2013

ரஷ்யாவில் உளவுக்கு ஆள்சேர்க்கை; US அதிகாரி சிக்கினார்!!

Thursday, May 16, 2013
மாஸ்கோ:ரஷ்யா::தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் அமெரிக்கரை அந்நாட்டு புலனாய்வு துறை கைது செய்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் அவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவிலும் பணியாற்றி வருகிறார் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,

உளவு பார்க்க ஆள்சேர்க்க முயன்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றி வரும் ரெயான் போகில் என்று கூறியுள்ளார். அவர் அதிக பணம் வைத்திருந்தாகவும், உளவு பார்க்க ரஷ்யர்களை சேர்க்க முயற்சி செய்ததாகவும் கூறினார்.

இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் ரெயான் போக்கிலை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அமெரிக்கா - ரஷ்யா தங்களது உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment