Thursday, May 16, 2013
இலங்கை::யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க “ரனவிரு தூதரு புலமைப்பரிசில்” நிதிக்காக 2,000,000 ரூபாவை நேற்று (மே 15) நன்கொடையாக வழங்கிவைத்தார்.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, பணப் பெறுமதிக்கான காசோலையை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்க்ஷவிடம் நேற்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளித்தார். இந் நன்கொடையானது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்டதுடன் சென்ற வருடமும் இவ்வாரான நன்கொடை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
“ரனவிரு தூதரு” புலமைப்பரிசில் திட்டமானது, நாட்டுக்காக தமது உயிரைத் தியாகம் செய்த மற்றும் ஊணமுற்ற முப்படை, பொலீஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் படை வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக உருவாக்கப்பட்டதாகும்.
இந் நிகழ்வில் அமைச்சின் சேவா வனிதா பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் அமைச்சின் சேவா வனிதா பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment