Thursday, May 16, 2013
இலங்கை::சுற்றுலா விசாவுடன் நாட்டிற்கு வருகைத்தந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் யாழ். உடுப்பிட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான இந்திய பிரஜையின் விசா காலாவதியாகி உள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இந்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஒருதொகை ஆடைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான இந்திய பிரஜையை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தொலைக்காட்சிக்கான 103 செய்மதி உபகரணங்கள்: சென்னையில் இருந்து வருகைதந்த இரண்டு இந்திய பிரஜை கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தொலைக்காட்சிக்கான 103 செய்மதி உபகரணங்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னையில் இருந்து வருகைதந்த இரண்டு இந்திய பிரஜைகளையும் இதன்போது கைதுசெய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இந்த சந்தேகநபர்கள் ஒருதொகை பெரிய வெங்காய விதைகளையும் தங்களது பயணப் பொதிகளில் மறைத்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
பெரிய வெங்காய விதைகளுடன், தொலைக்காட்சிக்கான செய்மதி உபகரணங்களையும் மறைத்துக் கொண்டுவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் இந்திய பிரஜைகள் இருவரும் விடுவிக்கப்பட்டதுடன், 800,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment