Thursday, May 16, 2013

.தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விநியாகிப்பதற்கு தமிழக அரசு தீர்மானம்!

Thursday, May 16, 2013
சென்னை::தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விநியாகிப்பதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நலமேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு கட்டமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுதவிர பாடசாலை கல்வி கற்கின்ற இலங்கை அகதி  மாணவர்களுக்கு பாடநூல்கள் அப்பியாசக் கொப்பிகள் சீருடைகள் மற்றும் உணவு என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடத்தின் மார்ச் மாதம் வரையில் சுமார் 66 ஆயிரம் இலங்கை அகதிகள் தென்னிந்தியாவிலுள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.அவர்களில் ஆயிரத்து 532 பேர் இதுவரை இலங்கை திரும்பியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
  

No comments:

Post a Comment