Monday, May 20, 2013
இலங்கை::வட மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படுவது படைவீரர்களை இழிவுபடுத்தும் வகையில் அமையும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தாய் நாட்டை பாதுகாப்பதற்காக படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக வடக்கு தேர்தல்களை நடத்தினால் அது படைவீரர்களின் தியாகங்களை மலினப்படுத்தும் வகையில் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்தை வென்றிருந்தால், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரும் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் சம்பந்தன், ஹக்கீம் மற்றும் அசாத் சாலி போன்றோருக்கும் அதே நிலைமை ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி ஈட்டப்பட்டிருக்கலாவிட்டால் அமிர்தலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணாநிதி, சம்பந்தன், ஜெயலலிதா போன்றோர் யுத்த வெற்றியை திசை திருப்ப முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதற்கு சகல சிங்களவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment