Monday, May 20, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது,பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டும்: மாலைதீவு!

Monday, May 20, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டுமென மாலைதீவு கோரியுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை வேறும் நாட்டுக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சமாட் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறும் நாட்டுக்கு மாற்றுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் காரணமாக இலங்கை மக்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைக்கு எதிராக தண்டனை விதிக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment