Monday, May 20, 2013
புதுச்சேரி::இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்படுவதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அவர்களை மீட்குமாறு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை தமிழ் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
இந்நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரும், திங்கள்கிழமை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட இருக்கின்றனர். திங்கள்கிழமை மாலையே காரைக்கால் திரும்புவார்கள்.
தமிழக முதல்வருக்குப் பாராட்டு: நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது நியாயமானது, பாராட்டுக்குரியது. காரணம், புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம்.
அதன் தலைவரின் உருவப்படத்தை பேனர்களில் வெளியிட்டு, கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கே சீமானைக் கைது செய்திருக்க வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் அவர் புதுச்சேரியில் ஏற்கெனவே பல முறை பேசியிருக்கிறார். சீமானைப் பொறுத்தவரை அவர் சிறை செல்வது சர்வ சாதாரணம். எனவே, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியானது.

No comments:
Post a Comment