Monday, May 20, 2013
சென்னை::தமிழீழ விடுதலை மட்டும்தான் எமது போராட்டத்தின் ஒரே இலக்கு: (புலி பினாமி) சீமான்
பிரபாகரனே எம்மினத்தின் ஒரே பெருமைமிகு அடையாளம். அதுபோல் சுதந்திர தமிழீழ தேசமே எம்மினம் நடத்திவரும் போராட்டத்தின் ஒரே இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இலங்கையில் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட மே 18ஆம் நாளை இனப்படுகொலை நாளென்று அறிவித்து, கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்த இருந்த பேரணி, பொதுக் கூட்டத்திற்கு காவல் துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, தினத்தந்தி அலுவலகம் அருகிலுள்ள அரங்கில் நேற்று மாலை ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ’ என்ற தலைப்பில் பிரிவினைவாத இன எழுச்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் சிறப்புரையாற்றினார்.
எம் இனத்தின் விடுதலைப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று ஒரு மாபெரும் படுகொலையுடன் முடிக்கப்பட்ட நிலையிலேயே, இலங்கையின் போர்க்களத்தில் இருந்து உலகளாயவிய அளவில் வாழும் எம் சொந்தங்கள் அந்த விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொண்டு வருகிறது. தமிழன் என்றொரு இனம் இந்த பூமிப்பந்தில் வாழும் வரை தமிழீழ தேசத்திற்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதனை உறுதியிட்டு உலகிற்கு கூறிடவே கடலூர் கடலென திரள்வோம் என்று அழைத்திருந்தேன்.
ஆனால், நாம் திட்டமிட்டிருந்த பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்காக நான் வருந்தவில்லை, காவல் துறையின் இம்முடிவு எனக்கு வியப்பை அளிக்கவில்லை. இதுபோன்று பல சோதனைகளைத் தாண்டித்தான் என் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். நமது இனத்திற்கான விடுதலைப் போராட்டத்தை நமது தலைவர் பிரபாகரன், அங்கு நம் இனத்தை அழித்தொழிக்க உறுதிபூண்டு செயல்பட்டுவரும் சிங்கள பெளத்த இனவாத அரசை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார். ஏனெனில் ஆயுதத்தால் நம் இனத்தை அடிமைப்படுத்த நினைத்த சிங்கள அரசுக்கு புரியும் மொழியில் எனது அண்ணன் அங்கே ஆயுதத்தால் பேசினார்.
ஆனால் இந்த மண்ணில் எனது மண்ணின் உரிமையை, எனது மக்களின் உரிமையை வென்றெடுக்க நாம் ஜனநாயக பாதையில் போராடுகிறோம். எந்த இடத்திலும் நாம் வன்முறையை கையில் எடுக்கவில்லை. ஆயினும் நமது பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் இங்கு தடை விதிக்கப்படுகிறது. எம் இனத்தின் மக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் இப்படிப்பட்ட தடைகளை உடைத்தெறிய நாம் உறுதியேற்க வேண்டும்.
எமது இனத்தின் விடுதலைக்காக, எமது மக்களின் அடிமைத் தளையை ஒடித்தெறிந்திட தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து எமது மாவீரர்களை பயங்கரவாதிகள் என்று கூறுகின்றனர். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடிய புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்கின்றனர். இப்படிப்பட்ட தடை தமிழர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயலாகும். இதன் மூலம் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ் மக்களின் தார்மீக உரிமையை மத்திய அரசு பறிக்கிறது” என்று சீமான் பேசினார்.

No comments:
Post a Comment