Monday, May 20, 2013
சென்னை::சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிசிசிஐ தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
விளையாட்டு வீரர்களை பிசிசிஐ குறிப்பிட்ட அளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார். காவல்துறையை போன்று வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ.க்கு அதிகாரம் கிடையாது என்று சீனிவாசன் கூறினார்.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த ரவி சவானி தலமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் படி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். போட்டிகளின் போது வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
வீரர்கள் தவறு செய்யும் பட்சத்தில் பி.சி.சி.ஐ கடும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாது என்றும் சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சீனிவாசன் கூறினார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட 3 வீரர்கள் மீதும் புகார் அளிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல்.லில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் பி.சி.சி.ஐ மூலம் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஐபிஎல் விளையாட்டு தொடங்கும் போதே செய்யக்கூடியது, கூடாதது எவை என்பது வகுக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ தயங்காது என்றும் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் கூறினார். வீரர்கள் மீதான நடவடிக்கை விஷயங்களில் பி.சி.சி.ஐ எதையும் மூடி மறைக்கவில்லை என்றும் கூறினார்.
போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் பேராசையே ஊழல்களுக்கு காரணம் என்றும் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். பி.சி.சி.ஐ விதிமுறைகளின் படி நியாயத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

No comments:
Post a Comment