Wednesday, May 1, 2013

அபுதாபி: நான்கு மாதக் குழந்தையைக் அடித்துக் கொன்ற பணிப்பெண்!!

Wednesday, May 01, 2013
அபுதாபி::அபுதாபியில் பணிபுரியும் இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர் நான்கு மாதக் குழந்தையின் தலையை சுவரில் அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
மலக் எனப் பெயரிடப்பட்டிருந்த இப் பெண் குழந்தை மரணத்தைத் தழுவ முன் அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணித்ததாக அபுதாபி அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
 
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தின் பின்னணியில் குழந்தைப் பராமரிப்பாளருக்கும் வீட்டுப்பணிப்பெண்ணுக்கும் இடையிலான போட்டி பொறாமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குழந்தைப் பராமரிப்புக்காக வரும் பெண் கழிவறைக்குச் சென்ற வேளையில் குழந்தையை அறைக்குள் கொண்டு சென்று மேற்படி அக்கிரமத்தைப் புரிந்த இப்பணிப்பெண் பின் எல்லோருடனும் சேர்ந்து தானும் அழுது வடித்திருந்த போதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு கமராக்களில் அவரது செயல்கள் யாவும் பதியப்பட்டிருந்ததால் உண்மை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment