Wednesday, May 1, 2013

இலங்கை, மனித கடத்தலுக்கான பிரதான இடமாக காணப்படுகிறது: மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா!

Wednesday, May 01, 2013
இலங்கை::இலங்கை, மனித கடத்தலுக்கான பிரதான இடமாக காணப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
 
காலி மாவட்ட காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இலங்கை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மனித கடத்தல்கள், தற்போது சர்வதேசத்தில் பிரதான கருப்பொருளாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவுஸ்ரேலியாவுக்கு கொண்டுச் செல்லும் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 100 பேர், மனித கடத்தல்காரர்களால் இவ்வாறு அவுஸ்ரேலியாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment