Wednesday, May 01, 2013
இலங்கை::தாய்லாந்தின் துணைப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகா
ர அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பொருளாதாரம், சமூகம், கலாசாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment