Friday, May 3, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது!

Friday, May 03, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான சமித்ரி ரம்புக்வெலவிற்கே தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

2013-2014ஆகிய ஆண்டு கால பகுதியில் குழுக்களின் தலைமையை இவர் வகிப்பார்.  

இந்த நியமனத்திற்காக ஆசிய பசுவிக் அரச குழுவின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த குழுவிற்கான உறுப்புரிமை இந்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் மிகக் குறைந்த வயதில் தலைமை பொறுப்பை சமித்ரி ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment