Friday, May 3, 2013

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- ஈ.பி.டி.பி. இணைந்தே போட்டியிடும்: பஷில் ராஜபக்ஷ!

Friday, May 03, 2013
இலங்கை::எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
வடக்குத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமப்பின் தயார் நிலை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
 
அமைச்சர் இவ் விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்:-
 
வடக்குத் தேர்தலை முன்னிட்டு வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீல அலை வேலைத்திட்டத்தின் கீழ் விசேட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது. வட மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அரச ஊழியர்கள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
நடந்து முடிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வருகை தந்த சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம். உலகில் எந்தவொரு புத்தாக்க ரீதியான அணிவகுப்புக்கும் எமது மக்கள் தயார் என்பதனை ஆளும் கட்சியின் மேதினக் கூட்டத்தில் மக்கள் வெளிக்காட்டினர்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா

ஆனால் வடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானதாக இருக்கும். வடக்குத் தேர்தலில் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான முறையில் போட்டியிடுகின்றது. இதுவரை காலமும் அவ்வாறான பலமான நிலைமை எமக்கு இருக்கவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் மக்கள் ஆதரவுடன் பலமாக உள்ளது.
சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். வடக்குத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்தே போட்டியிடும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை போன்று வடக்குத் தேர்தலில் மேலும் பல கட்சிகளுடன் இணைந்துபோட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றோம்.
 
வடக்குத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த காலம் மாறி தற்போது தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பே வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு நாங்கள் தயாராகிவருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment