Thursday, May 2, 2013

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் உதவிப் பிரதமர் டாரோ ஆசோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை!

Thursday, May 02, 2013
இலங்கை:ஜப்பானின் பிரதி பிரதமர் டாரோ அசோ மற்றும் ஜப்பானின் நாடாளுமன்றத்தில் நிதி தொடர்பான சிரேஷ்ட பிரதியமைச்சர் யுகோ ஒபுவ் ஆகியோருடன் உயர்மட்ட தூதுக்குழுவினரும் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
 
நேற்று இரவு 10:30 மணிக்கு கட்டுநாயக்க விமனா நிலையம் வந்திறங்கிய ஜப்பான் உதவிப் பிரதமரையும் அவரது பாரியாரையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவேற்றார்
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் உதவிப் பிரதமர் டாரோ ஆசோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று காலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

டாரோ அசோ, ஜப்பானின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.
ஜப்பானின் பிரதி நிதியமைச்சர் யோகா ஒபுச்சியும் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது விடுத்த அழைப்பிற்கு இணங்க இந்த குழு வருகை தந்துள்ளது.
 
இலங்கை விஜயத்தின் போது ஜப்பான் பிரதி பிரதமர், ஜனாதிபதியுடனும், அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடனும் இருதரப்பு முக்கிய பேச்சவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
 
இதுதவிர, கொழும்பு துறைமுகம் மற்றும் கப்பல் இறங்குதுறைகளையும் ஜப்பான் குழுவினர் கண்காணிக்கவுள்ளனர்.
 
குறித்த பகுதிகளை விரிவாக்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் 80 மில்லியன் யென்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான் உதவிப் பிரதமர் இலங்கை வந்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment