Thursday, May 02, 2013
லண்டன்::சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை அரசாங்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் மீது மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை தளமாக கொண்ட த இன்டிபென்டன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள், அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் போன்ற விடயங்கள் சர்வதேச மன்னிப்பு சபையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் எதிர்வரும்; நொவம்பர் மாதம் பொதுநலவாய தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானிய புறக்கணிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள், இந்த அறிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கலாம் என்று த இன்டிபென்டன்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான சுவர்க்கம் என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்ஸக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள் செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருவதை தவிர்மாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தொட்டைப் பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றுமொருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment