Thursday, May 02, 2013
கனடா::பொதுநலவாய நாடுகள் தமது கொள்கைகள் தொடர்பான சோதனையில் தோற்றுக் கொண்டிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், இந்த வருடம் பொது நலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கை நடத்த அனுமதி வழங்கியமை, பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்பட்ட தோல்வி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் பரவலாக இடம்பெற்ற இலங்கையில், பொதுநவலாய கொள்கைகளும் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்கு இந்த மாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை கனடா புறக்கணிக்கின்ற போதும், அந்த அமைப்பில் இருந்து கனடா விலகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment